Home /News /tamil-nadu /

உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் ஆலோசனை!

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக  மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்பு திமுகவின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த ஜூன்.25ம் தேதி நடைபெற்றது.

வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடைபெறாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றிற்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விரைவில் இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

Also read: அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார்? லிஸ்ட்டில் இருக்கும் சீனியர்ஸ்

இந்நிலையில் இரண்டாவது முறையாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடைபெற உள்ள நிலையில், அந்த விடுபட்ட பகுதியின் மாவட்ட செயலாளர்கள் 40 பேர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுக தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: DMK, MKStalin

அடுத்த செய்தி