30 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு! உள்ளாட்சியில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் ஒரு பார்வை

30 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு! உள்ளாட்சியில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் ஒரு பார்வை
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 18, 2019, 10:28 PM IST
  • Share this:
உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 30 ஆயிரங்கள் பதவி இடங்கள் அதிகரித்துள்ளன. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 785 இடங்களில், 70 ஆயிரம் இடங்களுக்கு மேல் பெண்கள் போட்டியிட உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 40 ஆயிரத்து 64 பணியிடங்கள் வழங்கப்பட்டிருந்தன. தற்போது 69 ஆயிரத்து 290 பதவிகள், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.


இந்த உள்ளாட்சித் தேர்தலில் பொதுப்பிரிவு பெண்களுக்கு 48 ஆயிரத்து 829 பதவியிடங்களும், பழங்குடியின பெண்களுக்கு 852 இடங்களும், ஆதி திராவிடப் பெண்களுக்கு 19,609 பதவியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

99 ஆயிரத்து 324 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் எஸ்.சி பிரிவு பெண்களுக்கு 15 ஆயிரத்து 862 இடங்களும், பழங்குடியினப் பெண்களுக்கு 688 இடங்களும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 36,179 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

6 ஆயிரத்து 471 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியில் எஸ்.சி பிரிவு பெண்களுக்கு 847 இடங்களும், பழங்குடியின பெண்களுக்கு 34 இடங்களும், பொதுப்பிரிவு பெண்களுக்கு இரண்டாயிரத்து 456 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில், எஸ்சி பிரிவு பெண்களுக்கு 86 இடங்களும், பழங்குடியின பெண்களுக்கு 4 இடங்களும், பொதுப்பிரிவு பெண்களுக்கு இரண்டாயிரத்து 245 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.இது தவிர 12 ஆயிரத்து 524 ஊராட்சித் தலைவர் பதவிக்கு, எஸ்சி பிரிவு பெண்களுக்கு ஆயிரத்து 602 இடங்களும், பழங்குடியின பெண்களுக்கு 104 இடங்களும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 4,556 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

388 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு எஸ்.சி பிரிவு பெண்கள் 48 இடங்களிலும், பழங்குடியினப் பெண்கள் 3 இடங்களிலும், பொதுப்பிரிவு பெண்கள் 143 இடங்களிலும் போட்டியிடலாம்.

31 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு, எஸ்சி பிரிவு பெண்கள் 4 இடங்களிலும், பொதுப்பிரிவு பெண்கள் 12 இடங்களிலும் போட்டியிடலாம்.. பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடுஇல்லை.

Also see:


 
First published: November 18, 2019, 10:11 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading