• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சி தேர்தல்: தேமுதிகவினருக்கு விஜயகாந்த் முக்கிய உத்தரவு!

உள்ளாட்சி தேர்தல்: தேமுதிகவினருக்கு விஜயகாந்த் முக்கிய உத்தரவு!

விஜயகாந்த்

விஜயகாந்த்

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் கழக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேமுதிகவினர் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

    Also read:  அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு- நிதியமைச்சர் அறிவிப்பு

    அனைத்து இடங்களிலும் தொண்டர்கள் போட்டியிட தயாராக இருக்க வேண்டும். மேலும், எந்தவொரு குழப்பத்திற்கும் இடமளிக்கக் கூடாது. வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் தேமுதிகவிற்கு முக்கியமான தேர்தலாக அமையும்.

    உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்கமால் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் கழக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உள்ளாட்சி தேர்தல் என்பது நமது கட்சிக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால், சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கழக தொண்டர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: