புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியத்தில் திமுக அதிமுக இரு கட்சிகளும் சம வாக்குகளை பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 ஒன்றிய கவுன்சிலர்களில் 10-ல் திமுகவும் ஒன்றில் காங்கிரசும் என 11 பேர் திமுக கூட்டணியிலும், 9 பேர் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடந்த மறைமுகத் தேர்தலில் அதிமுகவிற்கு 9 பேரும் திமுகவிற்கு 9 பேரும் ஒரு செல்லாத ஓட்டும் விழுந்தது. காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் வாக்களிக்க வராததால் அதிமுக திமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் 9 வாக்குகளை பெற்று சமநிலையில் இருந்ததை அடுத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
இதனையடுத்து ஒன்றிய அலுவலகம் முன்பு திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் மாலா வெற்றி.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 ஒன்றிய கவுன்சிலர்களில்
திமுகவை சேர்ந்த மாலாவிற்கு 9 வாக்குகளும் அதிமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்விக்கு 6 வாக்குகளும் கிடைத்துள்ளது. செ ல்லாதவை ஒன்றும் பதிவாகி உள்ளது.
இதனை அடுத்து அதிக வாக்குகள் பெற்ற திமுகவைச் சேர்ந்த மாலா வெற்றிபெற்றதாக அறிவிப்பு.
திருச்சி மாவட்டத்தில் அனைத்து (14 )ஒன்றியத் தலைவர்களாகவும் திமுகவினரே தேர்வு.
பத்துக்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் திமுகவினர் போட்டியின்றி தேர்வு.
1. மணிகண்டம் -கமலம் கருப்பையா (திமுக).
2. அந்தநல்லூர் - காமராஜ் (திமுக).
3. மணப்பாறை - அமிர்தவல்லி (திமுக).
4. வையம்பட்டி - குணசீலன் (திமுக).
5. மருங்காபுரி - பழனியாண்டி (திமுக)
6. திருவரம்பூர் - சத்யா (திமுக)
7. லால்குடி - ரவிச்சந்திரன் (திமுக).
8. புள்ளம்பாடி - ரஷ்யா ராஜேந்திரன் (திமுக)
9. மண்ணச்சநல்லூர் - ஸ்ரீதர் (திமுக).-
10. துறையூர் - சரண்யா (திமுக).
11. உப்பிலியபுரம் - ஹேமலதா முத்துச்செல்வன் (திமுக)
12. முசிறி - மாலா (திமுக)
13. தொட்டியம் - புனித ராணி (திமுக)
14. தாத்தையங்கார் பேட்டை - ஷர்மிளா (திமுக).
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்:
திமுக கவுன்சிலர் சந்திரமதி அண்ணாதுரை, அதிமுக சார்பில் வேட்பாளராக நின்று 12 ஓட்டுகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றி பெற்றார். திமுக சார்பில் சுமித்ரா தேவி 8 வாக்குகள் பெற்றார்.
இந்த ஒன்றியத்தில் அதிமுக அதிக இடங்களில் வென்றும், தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதால், அந்த பிரிவு கவுன்சிலர் இல்லாத நிலை இருந்தது.