உள்ளாட்சித்தேர்தல் கணக்கு; தொண்டர்களுக்கு கடிதம் - தினகரன் அடுத்த மூவ்

டிடிவி தினகரன்

தேர்தல் அரசியலைப் பொறுத்த மட்டில் வெற்றி தோல்வி என்பது உலகின் எல்லா இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும் பொதுவானதுதான்.

 • Share this:
  உள்ளாட்சித் தேர்தலுக்கு அமமுகவினரை தயார்ப்படுத்தும் டிடிவி தினகரன்.

  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க - தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட அவர்களால் வெற்றிப்பெற முடியவில்லை. கோவில்பட்டியில் போட்டியிட்ட தினகரனுக்கும் தோல்வியே பரிசாக அமைந்தது. தேர்தலுக்கு பின் தினகரன் அரசியல் செயல்பாடுகள் ஒன்றும் அதிரடியாக இல்லை. பெயரளவுக்கு அறிக்கை மட்டுமே வெளியிட்டு வருகிறார். தொண்டர்கள் சந்திப்பு கூட நடக்கவில்லை என்ற குமுறல்கள் அ.ம.மு.கவினரிடையே உள்ளது. இந்நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து கட்சி தொண்டர்களை உற்சாக மூட்டும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் வெளியிட்டுள்ளார்.

  அந்தக் கடிதத்தில், “பொறுப்புள்ள அரசியல் இயக்கமாக பேரிடர்கால அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியதால் நாம் அமைதிகாத்த சூழல் இப்போது மாறியுள்ளது. இதையடுத்து, மாவட்டம்தோறும் நீங்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவது மகிழ்ச்சியை தருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் தொடர்ந்து இயங்குவது நம்முடைய இயல்பு.

  Also Read:  தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்

  தேர்தல் அரசியலைப் பொறுத்த மட்டில் வெற்றி தோல்வி என்பது உலகின் எல்லா இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும் பொதுவானதுதான். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் மிகப் பெரிய தோல்விகளை சந்தித்து மீண்டெழுந்து சாதனை படைத்தவர்கள்தான். இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான். நிச்சயம் காலத்தை மட்டுமல்ல, காட்சிகளையும் கூட மாற்றுகிற சக்தி நமக்கு உண்டு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நீங்கள் பணத்தையோ பதவியையோ எதிர்பார்த்து நம்முடைய இயக்கத்தை ஊருக்கு ஊர் உருவாக்கி, கட்டி எழுப்பவில்லை சுயலாபத்திற்காக இடையில் போகிற சிலரைப் பற்றி கவலைப்படாமல், எதையும் எதிர்கொண்டு சிங்கத்தைப் போல சிலிர்தெழுந்திடும் உத்தியும், சக்தியும் நம்மிடம் இருக்கிறது.

  Also Read: தமிழகம் - புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பின் இன்று முதல் பேருந்து சேவை தொடக்கம்!

  நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் கணிசமான வெற்றியை ஈட்டினோம். அந்த உத்வேகத்தோடு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முழுவீச்சில் தேர்தலுக்குத் தயாராவோம்.

  இதுதவிர, அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தலும் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், அதற்கும் நாம் தயாராக வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்டம் போட்டவர்கள் அடுத்து என்னாகுமோ, எங்கே போகப் போகிறோமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பது கண்கூடாகவே தெரிகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: