உள்ளாட்சி தேர்தல்: நூறு சதவீதம் வெற்றியை உறுதி செய்ய திமுக அமைத்த வியூகம் இதுதான்..

மு.க.ஸ்டாலின்

நடைபெற உள்ள 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது.

  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எ.வ.வேலுவும், தென்காசிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஐ.பெரியசாமி மற்றும் தங்கம் தென்னரசும் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

Also read: சேலத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் 6 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி: புதிய கட்டுபாடுகள் விதித்து கலெக்டர் உத்தரவு

இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  முன்னிலையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா மற்றும்  குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.பிக்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

ஏற்கனவே 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இதையொட்டி , நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலுக்கான பணிகள், வியூகங்கள், வேட்பாளர் தேர்வில் கவனம் போன்ற கருத்துகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ஆட்சிக்கு வந்து முதல் தேர்தலை சந்திக்க உள்ளோம். மக்களிடையே உள்ள நல்ல பெயரை பயன்படுத்தி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தலை சந்திக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Published by:Esakki Raja
First published: