மேயர் பதவிக்கு நேரடியா? மறைமுகத் தேர்தலா? கன்பியூஸாக்கும் தேர்தல் ஆணைய இணையதளம்

மேயர் பதவிக்கு நேரடியா? மறைமுகத் தேர்தலா? கன்பியூஸாக்கும் தேர்தல் ஆணைய இணையதளம்
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: November 24, 2019, 11:02 PM IST
  • Share this:
மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு, மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள நிலையில், அது பற்றிய விவரம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்னும் பதிவேற்றப்படவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட மனுத் தாக்கல் செய்பவர்கள், அவர்களின் பிரமாணப் பத்திரங்கள் மற்றும் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்பம் உள்ள நபர்களிடம் விருப்ப மனு பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய திருப்பமாக தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளுக்கு மேயர், தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாக தேர்ந்தெடுப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னமும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவியிடங்கள் வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்றே, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை டிசம்பர் 13-க்குள் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரம், இணையதளத்தில்கூட தகவல் மாற்றப்படாதது பொதுமக்களுக்கும், தேர்தலில் போட்டியிட நினைப்பவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில உள்ளாட்சித் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இதுகுறித்து எந்த தகவலும் இல்லை. மேயர் மற்றும் கவுன்சிலர்களை வாக்காளர்களே தேர்வு செய்வர் என உள்ளது. இணையதளத்தில் மாற்றம் செய்யப்படாததால் பலர் குழப்பம் அடைந்துள்ளனர்.Also see:
First published: November 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading