நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலைியல் ஆவணங்களின்றி கைப்பற்ற ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு என 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் அவை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனியே தமிழகம் முழுவதும் 1650 பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தகுதியான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.53,72,001 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also read : மோதிக்கொள்ளும் உடன்பிறப்புகள்.. தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மீது குப்பைத்தொட்டி வீச்சு
தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.40,40,831 ரொக்கம் மற்றும் 15 லேப்டாப்கள், 40 மொபைல்கள், 19 துண்டுகள், 140 பித்தளை விளக்குள என அவற்றின் மதிப்பபு ரூ.12,57,080 ஆகும். மேலும் மதுப்பாட்டில்கள் மதிப்பு ரூ.74,090 என மொத்தம் இதுவரை ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து
இங்கே க்ளிக் செய்யவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.