கூட்டணிக்கு உள்ளேயே போட்டி வேட்புமனுக்கள் போடக்கூடிய சூழல் அமைந்துவிட்டது - திருமாவளவன்

கூட்டணிக்கு உள்ளேயே போட்டி வேட்புமனுக்கள் போடக்கூடிய சூழல் அமைந்துவிட்டது - திருமாவளவன்
அரசின் முடிவு கொரோனா பரவலை தீவிரப்படுத்தும் என்று எம்.பி தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
  • News18
  • Last Updated: January 4, 2020, 12:32 PM IST
  • Share this:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து நியூஸ் 18-க்கு பேட்டியளித்தார். அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:-

கே: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதை காட்டுகிறது? உங்கள் கருத்து என்ன?

ப: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்த தேர்தலில் திராவிட தலைமையிலான இந்த கூட்டணி கட்சிகள் கணிசமான அளவில் இந்த வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக ஒன்றிய கவுன்சிலர்கள் அதிகமாக திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.


ஆளுங்கட்சி ஏற்கனவே தேர்தலுக்கு தயாராகி திடுமென தேர்தல் தேதியை அறிவித்து. தேர்தல் தற்போது நடைபெற வாய்ப்பில்லை என்று எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருந்த சூழலில் சற்றும் எதிர்பாராமல் உச்சநீதிமன்ற நெருக்கடிக்கு உள்ளான நிலையில் தேர்தல் தேதியை அறிவித்தது. அதிலும்கூட பேரூர் மற்றும் நகர அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வில்லை என்பதால் நீதிமன்றத்தை அணுகினோம். ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்பதும் முறையாக தொகுதி வரையறை செய்யப்படவில்லை என்பதும், மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வருத்தப்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அப்படி வழக்கு நடத்திக் கொண்டிருந்த சூழலில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் தேர்தலுக்குத் தயாராக இல்லாத நிலையும் ஏற்பட்டிருந்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கூட கால அவகாசம் இல்லை. மாவட்ட நிர்வாக அளவில் ஆங்காங்கே பேசிக்கொண்டார்கள். மிகுந்த நெருக்கடிகள் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே தேர்தலை திமுக கூட்டணி சந்தித்தது. ஆனாலும்கூட ஆளுங்கட்சியை விட கணிசமான அளவில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது ஆளும் கட்சிக் கூட்டணிக்கு எதிரான மனநிலை மக்களிடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக திமுகவும் பாமகவும் மக்களவையில் ஆதரவு தெரிவித்திருந்தது. அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்ட கூடிய வகையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவுகளும் அதைத்தான் உணர்த்துகிறது என்று நான் நம்புகிறேன்.

கே: எப்பொழுதும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தான் முடிவுகள் இருக்கும் என்ற ஒரு கூற்று இருக்கிறது. ஆனால் இந்த முறை இரண்டு பெரும் கட்சிகளும் சமாதியான ஓட்டுகளை பெற்றுள்ளது. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? தேர்தல் நிறத்திலும் சரி வாக்கு எண்ணிக்கையின் போதும் சரி, தமிழகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது?ப: ஆளுங்கட்சிக்கு அதிகாரம் இருக்கிறது அதனால் அதிகாரவர்க்கம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும். குறிப்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் என்பது ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்க கூடிய ஒன்று. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கைகளின் போது அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டார்கள். சில இடங்களில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்றதை கூட மாற்றி அறிவித்திருக்கிறார்கள். அல்லது கால தாமதப்படுத்தி வேண்டுமென்றே பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட அதிகாரிகளோடு சண்டை போடுதல் முடிவை அறிவிக்க கூடிய நிலை உருவானது. தர்மபுரியில் நாங்கள் ஒரு மாவட்ட கவுன்சிலர் வெற்றி பெற்றிருக்கிறோம். அதை மாற்றி அறிவித்துவிட்டார்கள். பின்னர் அமைச்சர்கள் தலையிட்டு என்ன சரியோ அதை வெளியிட அறிவுறுத்திய பின்னரே விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் கடலூர் ஒன்றியத்திலும் விசிக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் அந்த முடிவை அறிவிக்காமல் தாமதப்படுத்தி கொண்டே இருந்தார்கள்.

ஆகவே ஆளுங்கட்சி தரப்பில் அதிகார வர்க்கத்தை பயன்படுத்திக்கொண்டு சில இடங்களில் முடிவுகளை மாற்றி அறிவிக்கக் கூடிய நிலையில் நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் அமைந்தது. அதையெல்லாம் தாண்டி மக்கள் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து, வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். ஆளும் பாஜக அரசுக்கு தமிழக அரசு துணை போகிறது என்பதும் தமிழகத்தில் நிலவுகிற சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் இதற்கு காரணம்.

கே: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்திலும், 38 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் வெற்றி பெற்றுள்ளது. இது குறைவான எண்ணிக்கை யாகவே இருக்கிறது. விடுதலைக் கட்சிகளின் இந்தக் குறைவான வெற்றிக்கு காரணம் என்ன?

169 இடங்களில் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு விசிக போட்டியிட்டு, கிட்டத்தட்ட 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு பல இடங்களில் போட்டி வேட்புமனுக்கள் போடக்கூடிய சூழல் அமைந்துவிட்டது. அதாவது கூட்டணி கட்சிகளுக்கு இடையே கூட திமுக போட்ட இடத்திலேயே விசிக, விசிக போட்ட இடத்திலேயே திமுக , காங்கிரஸ், இடது சாரிகள் என வேட்புமனுக்கள் போடக் கூடிய சூழல் அமைந்துவிட்டது.

இந்த குழப்பம் வேண்டுமென்றே நிகழ்ந்து விட்டது என்பதை விட போதிய கால அவகாசம் இல்லை, பேச்சுவார்த்தை நடத்தி முறையாக தொகுதி ஒதுக்குவது குறித்த நிலையான முடிவை எடுக்க இயலாமல் போய்விட்டது. எதிர்க்கட்சிகள் தயாராவதற்கு ஆளும் கட்சிகள் தயாராகி விட்டது. அது ஒரு வகையான strategy.

இந்த மாதிரியான நெருக்கடிகள் கூட வாக்கு சிதறுவதற்கு காரணம். என்றாலும் கூட மிக குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் பல இடங்களில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். இந்த வெற்றி வாய்ப்பை நாங்கள் கணிசமாக இழந்ததற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதிலும் வேட்பாளர்களை தீர்மானிப்பதிலும் குளறுபடிகள் ஏற்பட்டது தான் காரணம் என நான் எண்ணுகிறேன்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading