அதிக இடங்களில் வென்றும் ஒன்றிய சேர்மன் பதவியை பெற முடியாத நிலை...! சிக்கலில் கரூர் அதிமுக

அதிக இடங்களில் வென்றும் ஒன்றிய சேர்மன் பதவியை பெற முடியாத நிலை...! சிக்கலில் கரூர் அதிமுக

இரட்டை இலை

 • News18
 • Last Updated :
 • Share this:
  கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் அதிமுக அதிக இடங்களை பெற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை பெறமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.

  கரூர் மாவட்டத்தில் கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை, தோகைமலை ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக வேட்பாளர்களே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

  இதனால், இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுகவினரை சேர்ந்தவர்களையே தேர்ந்தெடுக்க முடியும்.
  ஆனால், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அந்த நிலை இல்லை. காரணம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரே ஒன்றியக்குழு தலைவர் ஆக முடியும்.

  கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஒன்றிய வார்டுகள் உள்ளன. இதில் 10 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று இடங்கள் பட்டியல் பிரிவு பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று இடங்களிலும் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர்.

  அதாவது 2, 7 மற்றும் 11 ஆகிய மூன்று வார்டுகள் பட்டியல் பிரிவு பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று ஒன்றிய வார்டுகளிலும் திமுக பெண் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
  இது தவிர 1- வது வார்டு மற்றும் மூன்றாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்களும் திமுக, காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

  இதனால், அதிமுக கூட்டணியில் 10 இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட பட்டியல் பிரிவு பெண் வேட்பாளர் யாரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Sankar
  First published: