சீட் ஒதுக்கீட்டில் பாமகவைப் போல எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை - வானதி சீனிவாசன்

சீட் ஒதுக்கீட்டில் பாமகவைப் போல எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை - வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
  • News18
  • Last Updated: January 4, 2020, 11:52 AM IST
  • Share this:
உள்ளாட்சி தேர்தல் சீட் பங்கீட்டில் பா.ம.கவை போல எங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கோவையில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அவர் கூறுகையில்:-

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க போட்டியிட்ட இடங்களே குறைவு. இதனால் மனவருத்தம் இருந்தது. பா.ஜ.க இப்போதுதான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாதிரி சொல்லப்படுகிறது. ஆனால் தனித்து போட்டியிட்ட போதே பல இடங்களில் பா.ஜ.க ஜெயித்து இருக்கின்றது.


பா.ஜ.க தமிழகத்தில் காலுன்றி வருகின்றது வளர்ந்து வருகின்றது என்று சொன்னால் எல்லாரும் கிண்டல் செய்கின்றீர்கள். விமர்சனம் செய்கின்றீர்கள். பா.ஜ.க வின் ஆதரவுத் தளம் அதிகரித்துள்ளது, இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவருகின்றது

உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகள் சம பலத்துடன் இருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலில் ஒரே இடத்தை மட்டும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. பல லட்சம் வாக்கு வாத்தியம் இருந்தது.

ஆனால் அடுத்த 6 மாதத்தில் இப்போது அதிமுக கூட்டணி முன்னேறி இருக்கின்றது என்பது இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவருகின்றது.முன்னாள் எம்.பி.அன்வர்ராஜா மகன்,மகள் தோற்று போனதிற்கு அந்த ஊரில் இருந்த நிலை, அவர்களுக்கான ஆதரவு, அந்த கட்சியினர் பணி செய்தது போன்றதை பார்க்க வேண்டும். தோல்விக்கு காரணமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வசதியாக அன்வர் ராஜா சொல்வதை ஏற்க முடியாது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது அதிக இடம் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படும் என நம்புகின்றோம்.

பா.ஜ.க என்றாலே கன்னியாகுமரி, கோவை என்ற நிலையை இந்த தேர்தல் மாற்றி காட்டி இருக்கின்றது. எங்கெல்லாம் பா.ஜ.கவிற்கு கணக்குகள் இல்லாமல் இருந்ததோ அந்த இடங்களில் உறுப்பினர்கள் தேர்வாகி இருக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் சீட் பங்கீட்டில் பா.ம.கவை போல எங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஊரக பகுதிகளுக்கு வழங்கப்பட்டதை போல இல்லாமல் நகர் புற உள்ளாட்சி பகுதிகளில் பா.ஜ.கவிற்கு கூடுதல் இடங்களை கூட்டணி தலைமை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்