உங்கள் ஊரில் தேர்தலில் போட்டியிட யாருக்கு இடஒதுக்கீடு? முழு விவரம்

உங்கள் ஊரில் தேர்தலில் போட்டியிட யாருக்கு இடஒதுக்கீடு? முழு விவரம்
  • Share this:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது.

இந்த நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரநிதிகளைக் கொண்டு பின்வரும் பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் வரும் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள்:


மாவட்ட ஊராட்சி தலைவர் -31
மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் - 31
ஊராட்சி ஒன்றியத் தலைவர் - 388ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் - 388
கிராம ஊராட்சி துணைத்தலைவர் - 12,524

என மொத்தம் 13,362 பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்பட உள்ளனர், இதில் மாவடா ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

இடஒதுக்கீடு விபரம்:

மொத்தம் உள்ள 31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில்.
பெண்கள் ( பொது ) - 12
பெண்கள் ( தனி ) - 4
பொது ( தனி ) - 4
பழங்குடியினர் ( பொது ) - 1
பொது - 10

இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல மொத்தம் உள்ள 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில்

பெண்கள் ( பொது ) - 143
பெண்கள் ( தனி ) - 48
பொது ( தனி ) - 48
பழங்குடியினர் ( பொது ) - 3
பழங்குடியினர் ( பெண்கள் ) - 3
பொது - 143

இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உங்கள் ஊரில் யார் போட்டியிட முடியும்? இட ஒதுக்கீடு முழு விவரம்:  https://drive.google.com/file/d/1nRrXjB7cttlDvDAuPBmq-y5rMzosFupB/view?usp=sharing

 
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading