Home /News /tamil-nadu /

வேட்புமனு தாக்கலுக்கு முன்பே களைகட்டிய பிரசாரம்... மதுரையில் உள்ளாட்சி தேர்தல் கலகல..!.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பே களைகட்டிய பிரசாரம்... மதுரையில் உள்ளாட்சி தேர்தல் கலகல..!.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், அதற்குமுன்பே தேர்தலில் போட்டியிட உள்ள சிலர் மதுரையில் போஸ்டர்களை ஓட்டி பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் புறநகர் ஊராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் மட்டும் முதற்கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான வேட்பு மனுவே இன்று தொடங்கியது.

ஆனால் அதற்கு முன்பாகவே மதுரையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை துவங்கிவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை, தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு ஏற்கப்பட வேண்டும், ஏற்கப்பட்ட பின்பாக சின்னம் ஒதுக்கப்பட வேண்டும். அதன்பிறகுதான் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்படும். ஆனால், மதுரையில் முழு நம்பிக்கையோடு பலர் சின்னங்கள் குறிப்பிடாமல் பிரச்சார நோட்டீஸ் அடித்து அவரவர் சார்ந்த பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.



தேர்தலுக்காக ஒட்டியுள்ள நோட்டீஸ்கள் எங்கு பார்த்தாலும் கலர்கலராய் தெரிகிறது. இன்னமும் தேர்தல் நடைபெறுமா நடைபெறாத என்கிற குழப்பம் ஒரு சாராருக்கு நிகழ்ந்து கொண்டிருக்க மறுபுறம் இதுபோன்று சிலர்  இப்போதே வாக்காளர்களை தன்வசப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊராட்சிகளில் போட்டியிடுபவர்கள் நோட்டீஸ் ஒட்டியதில் கூட ஆச்சரியமில்லை, அறிவிக்கப்படாத மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கூட நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர். எப்படிப் பார்த்தாலும் அவர்கள் சுயேச்சை வேட்பாளராக தான் இருக்க முடியும். ஆனாலும் தங்கள் பகுதியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பாகவே தங்கள் பிரச்சார பயணத்தை துவங்க வேண்டும் என்கிற ஆசையில்ஆசையில் களமிறங்கியுள்ளனர்.

பொதுவாகவே மதுரையில் போஸ்டர் கலாச்சாரம் பரவலாக இருக்கும். ஆனால் வேட்புமனு தாக்கலுக்கு முன்பே, இன்னும் ஒருபடி மேலே போய் தேர்தல் அறிவிக்கப்படாத வாரத்திற்கு கூட பிரச்சார நோட்டீஸ் ஒட்டும் வினோதம் மதுரைக்கு மட்டுமே சாத்தியம்.
Published by:Vijay R
First published:

Tags: Local Body Election 2019

அடுத்த செய்தி