• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!

வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு

39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. . இங்கு 78 மாவட்ட கவுன்சிலர்கள், 755 ஒன்றிய கவுன்சிலர்கள், 1,577 கிராம ஊராட்சித்தலைவர்கள், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது

  • Share this:
    தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு  இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.   மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

    தமிழகத்தின் காஞ்சிபுரம்செங்கல்பட்டுவிழுப்புரம்கள்ளக்குறிச்சிதிருநெல்வேலிதென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது.  முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் மாலை 5 முதல் 6 மணி என கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம்.

    ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுகவினர் பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிட்டுள்ளனர்.

    39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. . இங்கு 78 மாவட்ட கவுன்சிலர்கள், 755 ஒன்றிய கவுன்சிலர்கள், 1,577 கிராம ஊராட்சித்தலைவர்கள், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: T23 புலியை பிடிக்க 12வது நாளாக தேடுதல் முயற்சி!


    4 வண்ண வாக்கு சீட்டு:

    ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை நிறம், கிராம ஊராட்சி மன்ற தலைவர் - இளஞ்சிவப்பு நிறம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) - பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) - மஞ்சள் நிறம் ஆகிய வண்ண வாக்குசீட்டுகள் மூலம் வாக்கு செலுத்தப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் மழைபெய்து வரும்போதிலும் மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: