• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்!

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனால் தற்போது மயிலடுதுறை மாவட்டத்திற்கு தனியாக தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று  தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது  கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில்,  புதிதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையை செய்ய வேண்டிய காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வில்லை என்றும், தற்போது இவற்றிற்கு தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு!


    ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனால் தற்போது மயிலடுதுறை மாவட்டத்திற்கு தனியாக தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றும் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் 27 மாவட்டகளில் 2019-20 ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற அரசு 9 மாவட்டங்களில் வார்டு வரையறை நிறைவடைந்து உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: தமிழகத்தில் 16 லட்சம் பேர் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தவில்லை: சென்னையில் அதிகம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: