27 மாவட்டங்களில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வரும் 27, 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலையுடன் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்தது.
இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டது. அதன்படி 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 898 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35,611 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 ஆயிரத்து 776 பேரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 2,605 வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.