உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு...!

TamilNadu Local Body Election 2019 |

உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு...!
சீமான்
  • News18
  • Last Updated: December 13, 2019, 6:21 PM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக கரும்பு விவசாயி சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியினர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டனர்.

அதன்பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தையே ஒதுக்குமாறு கூறி இருந்தனர். ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.


இந்நிலையில், வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் சந்திரசேகரன் மாநில தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த மாநில தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்ட அதேவேளையில் அங்கீகாம் பெறாத நாம் தமிழர் கட்சிக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக கரும்பு விவசாயி(ganna kisan) சின்னத்தை ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீண்டும் கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதிருப்பது நாம் தமிழர் கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்