திருவான்மியூர் ஓடைக்குப்பம் வாக்குசாவடி மையத்தில் வாக்கு மெஷின் உடைத்த விவகாரத்தில் திமுக நபர்கள் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சென்னை ஒடைக்குப்பம் 179 வார்டு பகுதியில் அ.தி.மு.க சார்பாக ஜமுனா கணேசன் என்பவர் போட்டியிட்டார். தி.மு.க சார்பில் கயல்விழி என்பவர் போட்டியிட்டார். நேற்று மாலை வாக்கு பதிவு நடந்துக்கொண்டிருந்த போது, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த கதிர் என்ற தி.மு.க பிரமுகர் கத்தியோடு அடியாட்களுடன் வந்து வாக்கு பதிவு மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தி வாக்காளர்களை வெளியேற கூறி தகராறில் ஈடுப்பட்டார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க பிரமுகர் கதிர் (எ) கதிரவன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் மீது அரசாங்க சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்து அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 3 மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன்ர. .தலைமறைவாக உள்ள கதிர் (எ) கதிரவன் மற்றும் அவருடன் வந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.