வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தோல்வி..! விரக்தியில் வீதி வீதியாக ஒட்டிய போஸ்டர்

Local Body Election 2019

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தோல்வி..! விரக்தியில் வீதி வீதியாக ஒட்டிய போஸ்டர்
ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
  • Share this:
உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெற முயன்ற வேட்டபாளர் ஒருவர் தோல்வியடைந்ததால் பணம் வாங்கியவர்களை திட்டி வீதி வீதியாக போஸ்டர் ஒட்டி உள்ளார்.

தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி 2 நாட்களாக நடைபெற்றது.

மேற்கு மாவட்டங்களில் அதிமுகவும், தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அற்கான சான்றிதழ் பெற்றுள்ளனர்.


Also Read : நன்றி..! நன்றி..! தோற்கடித்த வாக்காளர்களுக்கு போஸ்டர் அடித்த வேட்பாளர்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டுவது ஒருபுறமிருக்க தோல்வியடைந்தவர்களும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில்  “காசு வாங்குன ஓட்டுப்போட்டாயா“ என்று பெயர் குறிப்பிடாத வேட்டபாளர் ஒருவர்  பணம் வாங்கிய வாக்காளர்களை திட்டி போஸ்டர் ஒட்டியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி ஒட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் குற்றமாகும். ஆனால் வாக்காளர்கள் கொடுத்த பணத்திற்கு ஓட்டுப் போடவில்லை என்று வேட்பாளர் ஒருவர் திட்டி போஸ்டர் ஒட்டி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கோட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : வெற்றி பெற்றதாக போஸ்டர் ஒட்டிய இரண்டு வேட்பாளர்கள்... பதவியேற்க தடை விதித்த உயர் நீதிமன்றம்...!
 உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்