சென்னை மாநாகராட்சியில் எந்த பிரிவினருக்கு எத்தனை வார்டுகள்...? முழு விபரம்

சென்னை மாநாகராட்சியில் எந்த பிரிவினருக்கு எத்தனை வார்டுகள்...? முழு விபரம்
சென்னை மாநகராட்சி அலுவலகம்
  • News18
  • Last Updated: November 24, 2019, 10:38 AM IST
  • Share this:
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில், எந்த பிரிவினருக்கு எத்தனை இடங்கள் என்பதை பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பிறகு, மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளின் இடஒதுக்கீட்டு பட்டியல், கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு இருந்தது. அப்போது சென்னை மாநகராட்சியில் பெண்கள் ( தனி ) பிரிவினருக்கு 11 வார்டுகளும், பெண்கள் ( பொது ) பிரிவினருக்கு 56 வார்டுகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.


இதேபோல பொதுத்தொகுதி ( தனி ) பிரிவினருக்கு 17 வார்டுகளும், ( பொது ) பிரிவினருக்கு 117 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என அறிவித்தார். அதன்படி, பெண்கள் ( தனி ) பிரிவினருக்கு 16 வார்டுகளும் , பெண்கள் ( பொது ) பிரிவினருக்கு 92 வார்டுகளும் ஒதுக்கப்பட்டன.

இதே போல பொதுத்தொகுதி ( தனி ) பிரிவினருக்கு 16 வார்டுகளும், ( பொது ) பிரிவினருக்கு 76 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
First published: November 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading