• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் : வாக்குச்சாவடிகளில் முடிந்த அளவுக்கு கண்காணிப்பு கேமரா - தமிழக அரசு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : வாக்குச்சாவடிகளில் முடிந்த அளவுக்கு கண்காணிப்பு கேமரா - தமிழக அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது, முடிந்த அளவுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும், பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் படையினரை அமர்த்த வேண்டும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து, பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது-

    அப்போது, 20 சதவீத வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி ஏற்படுத்தப்படும் எனவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ரகசியமாக செயல்படக் கூடிய தேர்தல் பார்வையாளர்களை அடையாளப்படுத்த முடியாது என்றும் வாக்கு எண்ணிக்கை மையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறைக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால், உள்ளே பொருத்த அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

    Also Read : மசினக்குடி அருகே 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

    இருப்பினும், முடிந்த அளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கமளித்தார். இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் அதிகாரிகள் நியாயமாக தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: