நெல்லையில் கிணறு சின்னத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து தரையில் உருண்டு அழுதார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்தில் பெண் வேட்பாளர் ஒருவர் கிணறு சின்னத்தில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தலில் தோல்லி உறுதியானதை அறிந்த அவர், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்து, தரையில் உருண்டு புரண்டு அழத் தொடஙினார். ‘என்னை கிணற்றில் தள்ளி விட்டார்களே படுபாவிகள்’ என்று அவர் கண்ணீர் விட்டார்.
இதேபோல், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பப்பட்டபோது, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டில் வாக்காளர் ஒருவர் 4 சின்னங்களுக்கு வாக்களித்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வாக்கு சீட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பா? முதலமைச்சர் இன்று ஆலோசனை!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.