முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓட்டுதான் போடலல... அன்பளிப்பை திருப்பி கொடுங்க...! தோற்ற வேட்பாளர் நோட்டீஸ் விநியோகம்

ஓட்டுதான் போடலல... அன்பளிப்பை திருப்பி கொடுங்க...! தோற்ற வேட்பாளர் நோட்டீஸ் விநியோகம்

News 18

News 18

  • Last Updated :

இனிவரும் காலங்களில் நேர்மையாக அன்பளிப்பு பெறாமல் வாக்களியுங்கள் என்று தோல்வியடைந்த வேட்பாளர், ஊர் முழுக்க நோட்டீஸ் கொடுத்து வருகிறார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், திமுக அதிக இடங்களிலும், அதிமுக சற்றே குறைய இடங்களிலும் வென்றன.

ஊராட்சி மன்றத்தின் தலைவரான 21 வயது பெண், 80 வயது பாட்டி என்று பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறின. தேர்தலில் தோற்றவர்கள் “காசு வாங்கிய நாயே... ஓட்டு போட்டியா?” என்று போஸ்டர் ஒட்டும் அளவுக்கு சில சிரிக்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறின.

இந்த நிலையில், தனக்கு வாக்களிப்பதாக கூறி அன்பளிப்பு பெற்று துரோகம் செய்த மக்களே, இனி வரும் காலங்களில் அன்பளிப்பு பெறாமல் வாக்களிக்குமாறும், எதிர் காலங்களில் வேட்பாளர்களிடம் வாக்களிப்பதாக உறுதி கூறி துரோகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதுடன் தான் கொடுத்த அன்பளிப்பை திருப்பித் தருமாறு வாக்காளர்களுக்கு தோற்ற வேட்பாளர் நோட்டீஸ் கொடுத்து வருகிறார்.

இராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இரா. புதுப்பாளையம் ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கார் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தத ரமேஷ் இந்த நோட்டீஸை வழங்கி வருகிறார்.

top videos

    First published:

    Tags: Local Body Election 2019