Home /News /tamil-nadu /

பூட்டு - சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஓட்டு போட முடியாமல் போடப்பட்ட பூட்டு...!

பூட்டு - சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஓட்டு போட முடியாமல் போடப்பட்ட பூட்டு...!

News18

News18

பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர், தனது வாக்கினை செலுத்த, நேரம் கடந்ததால் போலீசார் அனுமதிக்காத சம்பவம்  கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்தது. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டத் தேர்தல் நடந்தது. இதில், 341 ஊராட்சித் தலைவர்கள், 2,643 வார்டு உறுப்பினர்கள், 164 ஒன்றிய உறுப்பினர்கள், 17 மாவட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கடலூர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாறன் என்பவர் போட்டியிட்டார். இவருக்கு தேர்தல் ஆனையம் பூட்டு சாவி சின்னம் ஒதுக்கீடு செய்தது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய போது மக்கள் போய் வாக்களியுங்கள் என்று கூறி அவர் அனுப்பியுள்ளார்.  ஆனால், நேரம் ஆகியும் அவர் வாக்கு செலுத்தவில்லை.

மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னரும் வேட்பாளர் மாறன் தனது வாக்கினை செலுத்த தவறிவிட்டார்.

தேர்தல் அலுவலர்கள் வாக்கு பெட்டிக்கு சீல் வைத்துவிட்ட நிலையில், உள்ளே வந்த வேட்பாளர் மாறன் தனது வாக்கினை செலுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அனுமதிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தபடும் என அவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published by:Sankar
First published:

Tags: Local Body Election 2019

அடுத்த செய்தி