மோடி படத்துடன் ’உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர்’ போஸ்டர்... சூடுபிடிக்கும் ஊராட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்!

  • Share this:
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர், லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்  என்ற போஸ்டர் யுத்தங்களுடன் உள்ளாட்சி தேர்தல் களம் இறங்க உள்ளவர்கள் பிரசாரத்தினை தொடங்கியுள்ளனர். 
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தேதியை அறிவித்துள்ளது. 27, 30 ஆகிய 2 தேதிகளில் ஊராட்சிகளுக்கு தேர்தல் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் ஜூரம் தற்பொழுது தொடங்கியுள்ளது. சிலர் தங்களது பிரசாரத்தினை போஸ்டர் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடங்கியுள்ளனர்.

கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக அப்பகுதியை சேர்ந்த பாஜகவை சேர்ந்த தினேஷ்ரோடி என்பவர் உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர் என்ற போஸ்டருடன், தனது தேர்தல் பிரசாரத்தினை தொடங்கியுள்ளார்.

அதில் தனது செல்போன் எண்ணை தெரிவித்துள்ளது மட்டுமின்றி, ஊராட்சியில் என்ன பணிகள் செய்ய திட்டுமிட்டுள்ளதாக மக்களுடன் விவாதிக்க தயார் என்று பிரதமர் மோடி படத்துடன் அப்பகுதியில் உள்ள சுவர்களில் எங்கு திரும்பினாலும் போஸ்டர் மயம் தான், அவர் அது மட்டுமின்றி, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் தனது பிரசாரத்தினை தொடங்கியுள்ளார்.

இது குறித்து தினேஷ்ரோடியிடம் கேட்ட போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் பல பணிகள் தேங்கியுள்ளதாகவும், எனவே வரும் தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களுடன் இந்த தேர்தலில் களம் இறங்குள்ளதாகவும், மேலும் மக்களுக்கு பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களை எடுத்து கூறி தேர்தல் பிரசாரத்தினை தொடங்கியுள்ளதாகவும், அதிகளவில் தற்பொழுது மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதால் அதிலும் தனது பிரசாரத்தினை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இனாம்மணியாச்சி ஊராட்சி மன்றம் பெண்ணுக்கு ஒதுக்கியுள்ளதால் தனது குடும்பத்தில் இருந்து பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்றும் தினேஷ்ரோடி கூறியுள்ளார்.

தினேஷ்ரோடியிடம் தேர்தல் பிரசாரம் இப்படியிருக்க அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த செல்வராஜ் என்பவர், தினேஷ் ரோடிக்கு போட்டியாக தனது தாயார் ஜெயலெட்சுமி போட்டியிடுவதாக அறிவித்து போஸ்டர்களை ஓட்டியுள்ளார். தினேஷ் ரோடி உங்கள் வீட்டில், உங்கள் வேட்பாளர் என்ற வாசகத்துடன் ஒட்டிய நிலையில் செல்வராஜ்  லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்துடன் போஸ்டர் ஓட்டி வாக்காளர்களை கவர்ந்துள்ளார்.

Published by:Yuvaraj V
First published: