Home /News /tamil-nadu /

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக எதிர்பார்ப்பது என்னென்ன...?

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக எதிர்பார்ப்பது என்னென்ன...?

கோப்புப்படம்

கோப்புப்படம்

”அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சிகளுக்கும் உள்ளாட்சிகளில் இருக்கக்கூடிய அதிகாரம் மிகவும் அவசியமானது”

  • News18
  • Last Updated :
    உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை பெறவும், மேயர் பதவிகளுக்கும் குறிவைத்து போட்டி போடக்கூடிய சூழல் நிலவுகிறது. 

    3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இம்முறை திமுக, அதிமுக என பெரிய கட்சிகள் மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளும் அதிக முனைப்பு காட்டுகிறது.

    அதிமுகவை பொறுத்தரவை அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன், அதிகாரத்தில் இருக்கும்போதே உள்ளாட்சிகளில் அதிமுகவை பலப்படுத்தும் நோக்கில் தேர்தலை நடத்த ஆர்வம் காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இடைத்தேர்தல் வெற்றி அதிமுக.வுக்கு நம்பிக்கை அளித்துள்ளதோடு, கூட்டணி பலத்தை நம்பியுள்ளது. இதனால், அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக மாநகராட்சி மேயர் பதவிகளை பெற முயற்சிக்கிறது.

    இதற்காக கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனுக்களை பெறும் பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

    தேமுதிக.வை பொறுத்தவரை திருப்பூர், மதுரை உள்ளிட்ட இரண்டு மாநகராட்சி மேயர் மற்றும் 20% இடங்களை கேட்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ம.க., ஆவடி உள்ளிட்ட இரண்டு மாநகராட்சி இடங்களை பெற முயற்சிப்பதோடு, 20-25 சதவீத இடங்களை பெறவும் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. கோவை, நாகர்கோவில் என இரண்டு மேயர் இடங்களை பா.ஜ.க கேட்கிறது.

    அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றாலும், மறைமுகமாக பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதை அதிமுக எவ்வாறு கையாளப் போகிறது என்ற கேள்விக்கு, மெகா கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாத வகையில், பேச்சுவார்த்தையின் மூலம் இடம் ஒதுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    திமுக.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் மத்தியில் மேயர் பதவிகளுக்கான காய்நகர்த்தல் வெளிப்படையாக இல்லை என்ற போதிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் அதிக சதவீத இடங்களை பெறும் முனைப்பில் உள்ளன.

    அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சிகளுக்கும் உள்ளாட்சிகளில் இருக்கக்கூடிய அதிகாரம் மிகவும் அவசியமானது. கட்சியின் அடிமட்ட தொண்டர்களை உற்சாகப்படுத்துவதோடு, மக்களை கட்சியின் பக்கம் திருப்ப இது உதவும் என்பதாலும், அடுத்து சட்டமன்ற தேர்தல் வர இருப்பதாலும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. எனவே, இந்த உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு சவாலானதாக மாறி உள்ளது.

     
    Published by:Sankar
    First published:

    Tags: Local Body Election 2019

    அடுத்த செய்தி