நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை
பிப்ரவரி 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும்
வேட்புமனு தாக்கல் : ஜனவரி 28
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் : பிப்ரவரி 04
வேட்பு மனு பரீசலனை : பிப்ரவரி 05
வேட்புமனு வாபஸ் பெறும் நாள் : பிப்ரவரி 07
வாக்குப்பதிவு : பிப்ரவரி 19
வாக்கு எண்ணிக்கை : பிப்ரவரி 22
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. தேர்தல் நடவடிக்கைகள் பிப்ரவரி 24-ம் தேதியோடு முடிவுக்கு வரும். சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள். 80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - செய்திகள்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.