Local Body Election Live Updates | நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்

Local Body Election Live Updates | நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி, வேட்பு மனுதாக்கல், ஒட்டு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாக உள்ளன.

  • News18 Tamil
  • | January 26, 2022, 18:36 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 4 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:12 (IST)

    21 மாநகராட்சிகளின்  மேயர் மற்றும் 138 நகராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு வரும் மார்ச் 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்

    19:10 (IST)

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களின் அதிகபட்ச செலவினத்தொகை விபரம்


    19:9 (IST)

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகை விபரங்கள்


    19:3 (IST)

    மாநகராட்சி -நகராட்சி -பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. தேர்தல் நடவடிக்கைகள் பிப்ரவரி 24-ம் தேதியோடு முடிவுக்கு வரும் -மாநில தேர்தல் ஆணையம் 

    19:2 (IST)

    சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள். 80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும் -  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு

    19:0 (IST)

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

    18:59 (IST)

    வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும். ஜனவரி 31 வரை பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது - மாநில தேர்தல் ஆணையம்

    18:55 (IST)

    மாநாகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும்.  தமிழ்நாடு முழுவதும் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்  - மாநில தேர்தல் ஆணையம்.

    18:43 (IST)

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை - முழு விவரம

    பிப்ரவரி 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும்

    வேட்புமனு தாக்கல் : ஜனவரி 28

    வேட்புமனு தாக்கல் இறுதி நாள் : பிப்ரவரி 04

    வேட்பு மனு பரீசலனை : பிப்ரவரி 05

    வேட்புமனு வாபஸ் பெறும் நாள் : பிப்ரவரி 07

    வாக்குப்பதிவு : பிப்ரவரி 19

    வாக்கு எண்ணிக்கை  : பிப்ரவரி 22

    18:36 (IST)

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.