ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேர்தல் பிரச்சாரத்தில் ராஜேந்திர பாலாஜியை சாடிய கனிமொழி

தேர்தல் பிரச்சாரத்தில் ராஜேந்திர பாலாஜியை சாடிய கனிமொழி

கனிமொழி

கனிமொழி

Kanimozhi: இராஜபாளையத்தில் திமுக எம்.பி கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி.கனிமொழி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை கடுமையாக சாடினார். 

நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இராஜபாளையத்தில் உள்ள 42 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து திமுக எம்.பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது பேசியவர், “இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தமிழகமே உற்றுப் பார்த்த தொகுதி. இந்த தொகுதியில் தற்போது உள்ள எம்எல்ஏ தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிட்டவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அ.தி.மு.க அரசு கஜானாவை காலி செய்து அவர்களுடைய கஜானாவை நிரப்பிச் சென்றவர். அதிமுக ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு வேலை வாங்கி  தருவதாக கூறி தலைமறைவாக கர்நாடக காட்டுக்குள்  ஒழிந்திருந்தவரை  விரட்டி பிடித்தார்கள். தற்போது வரை அவர் இந்தப்பகுதிக்கு வந்தாரா என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கடுமையாக சாடினார்.

உள்ளாட்சியில் நல்லாட்சி மலர தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து உங்கள் கையில் கொடுத்துள்ளோம். நீங்கள்  வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள். இராஜபாளையம் பகுதிக்கு தேவையான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து உங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர கவுன்சிலர் மூலமே அனைத்து செய்து தரப்படும்.

ஆகையால் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும். திமுக கட்சிக்கு உதயசூரியன் சின்னத்திலும் கூட்டணி கட்சியினருக்கு அவர்களுக்கு வழங்கி உள்ள சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு” கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் : M.செந்தில்குமார் (சிவகாசி)

First published:

Tags: Kanimozhi, Local Body Election 2022, Sivakasi, Tamilnadu