தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இடப்பங்கீடு தொடர்பாக பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக - பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக - பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நீடித்து வந்தது. முதலில் 35 சதவீத இடங்களை பாஜக கேட்டதாகவும், பிறகு 20 சதவீத இடங்களை கோரியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், அதிமுக அதிகபட்சமாக 8 சதவீத இடங்களை மட்டுமே தர முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதிமுகவுடனான இடப்பங்கீடு மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து பாஜக தேசிய தலைமைக்கு முழுமையான தகவலை, தமிழக பாஜக அனுப்பியது.
இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கரு நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் வி.பி துரைசாமி, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை. மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Annamalai, BJP, Local Body Election 2022