ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் கட்சிகளுக்கு கிடைக்கும் பதவிகள் எவ்வளவு..? இழுபறி எவ்வளவு..?

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் கட்சிகளுக்கு கிடைக்கும் பதவிகள் எவ்வளவு..? இழுபறி எவ்வளவு..?
News18
  • Share this:
மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கும் நிலையில், யார் யாருக்கு எத்தனை பதவிகள் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 513 மாவட்ட கவுன்சிலர்கள், 5087 ஒன்றிய கவுன்சிலர்கள், 9616 ஊராட்சி மன்ற தலைவர்களும், 76 ஆயிரத்து 712 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடம், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடம்,9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அதிமுக கூட்டணி 240 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 271 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 வார்டுகளில் அதிமுக கூட்டணி 2199 இடங்களிலும், திமுக கூட்டணி 2356 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தவரை அதி்முக, திமுக தலா 135 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் பெறுவது உறுதியாகி உள்ளது. இரண்டு ஒன்றியங்களில் அமமுகவுக்கு தலைவர், துணை தலைவர் பதவி கிடைக்க உள்ளது. மீதமுள்ள 42 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது.

இதுபோன்று ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. சுயேச்சை வேட்பாளர்களை இழுக்க பேரமும் நடக்கிறது. அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கவுன்சிலர்கள், எதிர்முகாமுக்கு மாறி விடக்கூடாது என்பதற்காக, அவர்களை கவனிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.இதே நேரத்தில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளின் உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் இழுக்கும் வேலைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

 
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading