உங்கள் ஊரில் எப்போது உள்ளாட்சி தேர்தல் ? முழு விவரம்

உள்ளாட்சித் தேர்தல்

2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகள்,  ஊராட்சி ஒன்றிய வார்டுகள்,  கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளை உள்ளடக்கிய  ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

  • Share this:
    தமிழத்தின் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தின் நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22ம் தேதி ஆகும்.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டத்தில் எங்கெங்கு தேர்தல் நடைபெறும், இரண்டாம் கட்டத்தில் எங்கெங்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, மாவட்டங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகள்,  ஊராட்சி ஒன்றிய வார்டுகள்,  கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளை உள்ளடக்கிய  ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    முதல்கட்ட வாக்குப்பதிவு : (06.10.2021)

    செங்கல்பட்டு மாவட்டத்தின் இலத்தூர், புனித  தோமையார்மலை, திருக்கழுக்குன்றம்,  திருப்போரூர் ஊராட்சி ஒன்றியங்கள்.  காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர்,  வாலாஜாபாத். விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி,  கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி. கள்ளிக்குறிச்சி மாவட்டத்தின்  ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர்,உளுந்தூர்பேட்டை. வேலூர் மாவட்டத்தின்  குடியாத்தம், கீவகுப்பம்,  காட்பாடி, பேர்ணாம்பட்டு.

    இதையும் படிங்க: தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது!

    திருப்பத்தூர் மாவட்டத்தின் சோலையார்பேட்டை,  கந்திலி, நாட்றம்பள்ளி,  திருப்பத்தூர். ராணிப்பேட்டை மாவட்டத்தின்  ஆற்காடு, திமிரி, வாலாஜா. திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம்,  சேரன்மகாதேவி,  மானூர்,  பாளையங்கோட்டை,  பாப்பாக்குடி. தென்காசி மாவட்டத்தின்  ஆலங்குளம்,  கடையம், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள்.

    இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு:(09-10-2021)

    செங்கல்பட்டு மாவட்டத்தின் அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், காட்டாங்கொளத்தூர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர், திருபெரும்புதூர்.  விழுப்புரம் மாவட்டத்தின் காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சின்னசேலம், கள்ளக்குறிச்சி,  கல்வராயன் மலை, சங்கராபுரம், தியாகதுருகம்.

    மேலும் படிக்க: அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு: நிறைவேறியது நீட் விலக்கு சட்ட மசோதா!


    வேலூர் மாவட்டத்தின்  அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர். இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், காவேரிப்பாக்கம்,  நெமிலி, சோளிங்கர். திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆலங்காயம், மாதனூர். திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு, நான்குனேரி, இராதாபுரம், வள்ளியூர். தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஊராட்சி ஒன்றியங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: