உள்ளூரில் இருந்தபடியே, டிஜிட்டல் ஊடக உலகில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு...

உள்ளூரில் இருந்தபடியே, டிஜிட்டல் ஊடக உலகில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு...

Mobile Journalism

நியூஸ்18 தமிழ்நாடு செய்திக் குழுமம் உருவாக்கியுள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எண்ணுபவர்கள் கீழ்காணும் விவரங்களை தெளிவாக படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்...

 • Share this:
  டிஜிட்டல் ஊடக உலகில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு நியூஸ்18 தமிழ்நாடு புதிய வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.

  ஊடகத்துறையில் பயணிக்கவேண்டும் என்பது எண்ணற்றை இளைஞர்களின் கனவாக இருக்கும். இருப்பினும், ஊடகத்துறை சார்ந்த படிப்பு படிக்காததாலும், எப்படி ஊடக நிறுவனங்களை அணுகுவது என்பது குறித்த போதிய அறிவு இல்லாததும் அந்த எண்ணம் கனவாகவே கலைந்துவிடுகிறது. தற்போது, அந்த இளைஞர்களின் கனவை நனவாக்க நியூஸ்18 தமிழ்நாடு செய்தி குழுமம் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

  மல்டி மீடியா செய்தியாளராக உங்கள் சொந்த ஊரிலேயே பணியாற்ற விரும்பினால் நெட்வொர்க் 18 குழுமம் அரியதொரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் டிஜிட்டல் பங்களிப்பு மூலம் செய்தித் துறையில் கால்பதிக்கும் உங்கள் கனவை நனவாக்கலாம்..

  தேவையான திறமை:

  அச்சமின்றி, கேமரா முன்பு நின்று விரிவாக பேசுதல், கேமிராவுடன் ஸ்மார்ட்போன்களைக் கொண்டு பணியாறறும் திறன், செய்திகளின் கருவை புரிந்துகொள்ளும் அறிவு, நேர மேலாண்மை திறன், தமிழ் மொழியில் நல்ல புலமை, ஆங்கிலம் தெரிந்தால் கூடுதல் சிறப்பு. டிஜிட்டல் தேடலில் ஆர்வம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் நல்ல ஈடுபாடு.  தேவையான தகுதி:

  விண்ணப்பதாரரின் வயது வரம்பு 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருந்தால்போதும். BCA, MCA, MBA, B.TECH என என்ன படித்திருந்தாலும், பத்திரிகையாளராக வேண்டும் எந்த உந்துதல் இருந்தால் நீங்களும் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை..

  உங்கள் சுயவிபரக்கோவையுடன்(Resume), விண்ணப்பத்தை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்புங்கள்.. tnlocal18@news18.com

  விண்ணப்பத்தில் உங்கள் மாவட்டத்தின் பெயரை தவறாமல் எழுதவும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: