கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் எல்லா தொழில்துறைகளும் பாதிப்பை எதிர்கொண்டன. மாதத் தவனையில் கடன் வாங்கியிருந்தோர் அதை திரும்பச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்தல் கூடாது என்று கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விஷயத்தில் மத்திய அரசு இறங்கி வந்திருப்பதுபோல விவசாயிகள் கடன் விவகாரத்திலும் இச்சலுகையை நீட்டிக்கவேண்டும் என்று மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ”வட்டிக்கு வட்டி கடன் பிரச்சினையில் இப்போது இறங்கி வந்துள்ள அரசு, இப்போதும் விவசாய கடனுக்கு மனம் இரங்கவில்லை. விவசாயக் கடனுக்கு இது பொருந்தாது என்ற மத்திய அரசின் நிலைபாடு ஏற்கத்தக்கதல்ல. விவசாயிகள் கடனுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட வேண்டும்.
மேலும் நுண் நிதி நிறுவனங்கள் விவசாயம், கல்வி, சிறு தொழில் ஆகியவற்றில் ரூபாய் 10 லட்சம் வரை கடன் பெற்ற சிறு கடனாளிகளுக்கு வட்டியும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதான் உண்மையான பலனாக இருக்கும். அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப நிவாரணம். இந்த பொருளாதாரத்தை மறுசுழற்சி செய்து மீட்டெடுப்பதற்கும் உதவும்” என்று தெரிவித்தார்.
மேலும், காலம் கடந்து யோசிப்பதற்கு பதில் காது கொடுத்துக் கேட்பீர்களா என்றும் இதிலுமா விவசாயிகளுக்கு ஓர வஞ்சனை செய்வீர்கள் என்றும் வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Loan, Su venkatesan