கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை 12 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி பேரவையில் தெரிவித்தார்.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டார். அதில் கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை 12 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 12 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை 2022-23 ஆம் நிதியாண்டு முதல் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உச்சவரம்பு ரூபாய் 12 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ்...! ரேஷன் கார்டு இனி வீட்டுக்கே வந்துவிடும்
இதேபோல், அனைவருக்கும் வங்கிச் சேவை என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட, மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ‘நகரும் கூட்டுறவு வங்கி’ என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.