முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!

பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!

திருமாவளவன் - எல்.முருகன்

திருமாவளவன் - எல்.முருகன்

எல்.முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து முருகன் நீக்கப்பட்டது அவரை அவமதிக்கும் செயல் என திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல். திருமாவளவன் இன்று காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிதம்பரம் வந்தார். சிதம்பரத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கூறியதாவது, “ மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிப்பதை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்  அதனால் நாளைய கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். 10 நாட்களுக்கு முன்பே தமிழக முதல்வருக்கு இந்த வேண்டுகோளை நான் வைத்தேன். தற்போதைய அவருடைய அறிவிப்பு நம்பிக்கையையும், ஆறுதலையும் அளிக்கிறது.

Also Read:   Valimai Update: வலிமை பட மோஷன் போஸ்டர் ரிலீஸ் அறிவிப்பு; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கின்றனர். இந்த விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகளுடன் இணைந்து மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டம் நடத்தினோம். மத்திய அரசின் வறட்டு பிடிவாதத்தால் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கொரோணா நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மோடி அரசின் அணுகுமுறை தான் இதற்கு காரணம். இந்த வழக்கில் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

Also Read:     மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய ‘குட்டி கோவா’ புதுச்சேரி!

கொங்கு நாட்டைப் பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், பாஜக ஒரு சமூகப் பிரிவினைவாத சிந்தனை கொண்ட கட்சி. மதம், ஜாதி பெயரால் பிளவை ஏற்படுத்தும் அரசியல் உக்தி இது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உக்திகளை செய்து வருகிறது. இப்படித்தான் ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரித்தது. வட இந்திய மாநிலங்களை அரசியல் ஆதாயத்திற்காக துண்டு போட்டு வருகின்றது. வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தமிழ்நாட்டிலும் இது போன்ற முயற்சியை செய்து பார்க்க உள்ளதாக தெரிகிறது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியுற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாஜக தலைவராக இருந்த எல்.முருகனை நீக்கியது தவறு.  அது அவருக்கு செய்த அவமதிப்பு. அவரால்தான் தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொழி, இனம் அடிப்படையில் தேசிய அளவில் அனைவரும் அணி திரள்வதை பாஜக ஒருபோதும் விரும்புவதில்லை என திருமாவளவன் கூறினார்.

செய்தியாளர் பிரசன்னா வெங்கடேசன், சீர்காழி

First published:

Tags: Kongu Nadu, L Murugan, Thirumavalavan