சாக்லேட் என்று வேதிப்பொருளைச் சாப்பிட்ட 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

சாக்லேட் என்று வேதிப்பொருளைச் சாப்பிட்ட 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்
  • News18
  • Last Updated: January 23, 2020, 10:11 AM IST
  • Share this:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே சாக்லேட் என நினைத்து வேதிப்பொருளை சாப்பிட்ட எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் காரம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் எல்கேஜி வகுப்பறையின் அருகே விழுந்துள்ளது.

இதை பார்த்த எல்கேஜி மற்றும் யூகேஜி படிக்கும் மாணவ மாணவிகள், சாக்லேட் என நினைத்து நாக்கில் வைத்து சுவைத்திருக்கின்றனர்.


அப்போது எரிச்சல் காரணமாக மாணவர்கள் சத்தமிட்டதால் அருகில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு 8 மாணவர்களும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Also see...
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்