ரகசிய திருமண வாழ்க்கை அம்பலமானதால், மனைவியையும் கைக் குழந்தையையும் தாக்கிய கணவன்... வலைவீசும் போலீசார்...(வீடியோ)
கன்னியாகுமரி மாவட்டத்தில், கைக்குழந்தையுடன் தனது வீட்டில் குடியேறிய பொறியியல் பட்டதாரி மனைவியையும் தன் குழந்தையையும் இரும்புக் கம்பியால் தாக்கிய கணவனைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
- News18 Tamil
- Last Updated: January 9, 2021, 2:24 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே திருவிதாங்கோடு அண்ணாநகரைச் சேர்ந்தவர் 26 வயதான சந்தியா. பொறியியல் பட்டதாரியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான தன் உறவினர் ரஜீஷைக் காதலித்து வந்தார். டெம்போ ஓட்டுநரான ரஜீஷும் சந்தியாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் சந்தியா கருவுற்றார். சந்தியாவிடம் இருந்து ரஜீஷ் விலக முயன்ற நிலையில், திருமணம் செய்து கொள்ளும்படி காதலனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் சந்தியா.
தனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறிய ரஜீஷ், கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்; பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்தனர். திருமணத்திற்குப் பின் பெற்றோருக்குத் தெரியாமல், சந்தியா வீ்ட்டில் வசித்து வந்தார் ரஜீஷ்.
பின்னர் கேரளாவிற்கு செல்வதாகக் கூறி ரஜீஷ் சென்று விட்டார். சந்தியாவால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே சந்தியாவிற்குப் பெண் குழந்தையும் பிறந்தது. காதல் கணவனுடன் சேர்த்து வைக்கும்படி தக்கலை காவல்நிலையம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகரளித்தார்.
இந்த நிலையில் திடீரென சந்தியாவை செல்போனில் தொடர்பு கொண்ட ரஜீஷ், அவருடன் வாழ விருப்பமில்லை என்றும் வேறு திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டார்.
அதி்ர்ச்சியடைந்த சந்தியா, கடந்த நவம்பர் 4ம் தேதி கைக்குழந்தையுடன் காதல் கணவன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி ரஜீஷின் வீட்டிலேயே குடியமர்த்தினர்.ஆனால் சந்தியாவை ஏற்காத ரஜீஷின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். சந்தியாவுடன் அவரது தாயார், ரஜீஷின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கேரளாவில் இருந்த ரஜீஷ், வெள்ளிக்கிழமை காலையில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க...வங்கி கடன் வசூல் ஏஜென்ட் கொடுத்த டார்ச்சரால் முதியவர் தற்கொலை
சந்தியா மற்றும் குழந்தையை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டது. துணிமணிகளையும் பொருட்களையும் வெளியில் வீசியெறிந்து விட்டு மூவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பின்னர் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டுத் தப்பியோடி விட்டார்.
ரஜீஷ் சென்ற பின்னர், ஏணி மூலம் மொட்டை மாடியில் ஏறி வீட்டிற்குள் செல்ல முயன்றார் சந்தியா. தகவல் அறிந்த போலீசார் சந்தியாவையும் குழந்தையையும் மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மனைவியையும் குழந்தையையும் தாக்கிய கணவன் ரஜீஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
தனது ரகசிய திருமண வாழ்க்கை அம்பலமானதால், மனைவியையும் கைக் குழந்தையையும் தாக்கிய கணவன் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
தனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறிய ரஜீஷ், கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்; பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்தனர். திருமணத்திற்குப் பின் பெற்றோருக்குத் தெரியாமல், சந்தியா வீ்ட்டில் வசித்து வந்தார் ரஜீஷ்.
பின்னர் கேரளாவிற்கு செல்வதாகக் கூறி ரஜீஷ் சென்று விட்டார். சந்தியாவால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே சந்தியாவிற்குப் பெண் குழந்தையும் பிறந்தது.