தொழிலாளிக்கு, தொழில் வசதி இருக்கும் இடத்தில் வீடு இருக்கவேண்டும் - நல்லகண்ணு

தொழிலாளிக்கு, தொழில் வசதி இருக்கும் இடத்தில் வீடு இருக்கவேண்டும் - நல்லகண்ணு
  • Share this:
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு கொடுத்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வாடகை வீட்டில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு மீண்டும் சென்னை நந்தனத்தில் வீடு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ”ஏற்கனவே கலைஞர் கொடுத்த வீட்டில் வசித்து வந்தேன். பொதுவாக வீடு இல்லாதவர்களுக்கு பெட்டிஷன் போட்டு கேட்டால் வீடு கொடுப்பது வழக்கம் அந்த முறையில் வீடு வழங்கப்பட்டிருந்தது.

அப்பொழுது அந்த இடம் முழுக்க காலி செய்யப் போவதாக சொன்னார்கள். காலி செய்வதாக இருந்தால் மாற்று வீடு கொடுங்கள் என அப்போது கேட்டோம் . ஆனால் அதற்கு பதில் சொல்லவில்லை. பின்னர் குறிப்பிட்ட தேதியில் காலி செய்து தர வேண்டும் என்று கேட்டார்கள். சரி பிரச்சனை வேண்டாம் என்று காலி செய்து கொடுத்தேன்.


நான் மட்டுமல்ல கக்கன் குடும்பத்தாருக்கும் இது போன்ற நிலை ஏற்பட்டது. எனவே முன் அறிவிப்பு இல்லாமல் இவ்வாறு செய்யக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அப்பொழுது துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வீடு வழங்குவதாக சொல்லி இருந்தார். தற்போது வீட்டுவசதி வாரிய விதிப்படி வழங்கியிருக்கிறார்கள் நன்றி” என அவர் தெரிவித்தார்

இந்த இடைப்பட்ட காலத்தில் நான் குடியிருந்த வீட்டின் வாடகை மிகவும் அதிகம் சாதாரண மக்கள் வாடகை வீட்டில் வசிப்பது கடினமான ஒன்று. தண்ணீர் வசதி இருக்காது.. மற்ற வசதிகளும் சரியாக இருக்காது. வாடகையும் அதிகம் இப்படி பல கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் அரசு வீட்டில் சுதந்திரமாக இருக்கலாம் ஆனால் அதை திடீரென்று வெளியேற்றினால் சிரமம்தான்.

இதை போல பாரம்பரியமாக குடியிருக்கக்கூடிய ஏழை மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.  குடியிருப்பு மாற்று உரிமைச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் ஒரு தொழிலாளியை தொழில் வசதி இருக்கும் இடத்தில் மட்டுமே அவர்களுக்கு இடம் தரவேண்டும் அவர்களுக்கான தொழில் வேலைவாய்ப்பு நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் ஆனால் இந்த விதியை மீறி செம்மஞ்சேரி கண்ணகி நகர் என்று அவர்களே வெளியேற்றுகிறார்கள்.அதேவேளையில் பள்ளிப்படிப்பு இருக்கும் காலகட்டத்தில் வெளியேற்றுகிறார்கள். தாக்குதல் முழுக்க ஏழை மக்களுக்கும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இருக்கிறது அதை எதிர்த்து போராடி வருகிறேன் என அவர் தெரிவித்தார்.
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading