Home /News /tamil-nadu /

திருச்சி : துறையூர் அருகே கால்நடை பராமரிப்பு  விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில் ,தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  • 1 minute read
  • Last Updated :
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில் ,தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம் ,நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை , சிறு அறுவை சிகிச்சை , தாது உப்பு கலவை வழங்குதல் ஆகிய சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இம்முகாமை கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணைத் தலைவர் காமராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா, உதவி இயக்குநர் சையத் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கன்றுகள் பேரணியும் நடைபெற்றது. மேலும் கால்நடை உதவி மருத்துவர்கள் தனலட்சுமி, மதி, முருகேசன் , வடிவேல் ,தமிழரசி, கனகராஜ், செந்தில்குமார்,

கால்நடை ஆய்வாளர்கள் சுந்தரபாண்டியன் , அமுதலட்சுமி, ஆனந்தராஜன், கமலவேணி, தர்மராஜன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சஞ்சீவி , ஸ்ரீகுமார், வித்யா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கேசவன் , சண்முகராஜ், புஷ்பலதா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

செய்தியாளர்-ஜெ.கென்னடி- திருச்சி
First published:

அடுத்த செய்தி