திமுக அமைச்சரவையில் புதியவர்கள் யார் யார்? முழு விவரம்!

திமுக

மொத்தம் 34 பேர் கொண்ட இந்த அமைச்சரவை பட்டியலில் 15க்கும் மேற்பட்ட புதியவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தின் முதல்வராக நாளை மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள நிலையில், 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுகவை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்துள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தப் புதிய அரசு, நாளை காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெறுகிறது.

  இந்த நிலையில், மு.க. ஸ்டாலினுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.மொத்தம் 34 பேர் கொண்ட இந்த பட்டியலில் கடந்த 2006-ம் ஆண்டில் கலைஞர் தலைமையில் அமைச்சர்களாக இருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  15க்கும் மேற்பட்ட புதியவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு..

  1. சக்கரபாணி - உணவு மற்றும் பொது விநியோகத் துறை

  2. ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் நெசவுத் துறை

  3. ம.சுப்ரமணியன் - சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை

  4. பி.மூர்த்தி - வணிக வரி மற்றும் வரிகள் மற்றும் பதிவுத்துறை

  5. எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

  6. பி.கே.சேகர்பாபு - இந்து சமய நலத்துறை

  7. பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை

  8. எஸ்.எம்.நாசர் - பல்வளத்துறை

  9. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மை நலத்துறை

  10. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வி துறை

  11. வி.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாடு வளர்ச்சித்துறை

  12. சி.வி.கணேசன் - தொழிலாளர் மற்றும் ஸ்கில் மேம்பாடு துறை

  13. மனோ தங்கராஜ் - தொழில்நுட்பத் துறை

  14. மதிவேந்தன் - சுற்றுலாத்துறை

  15. கயல்விழி - ஆதிதிராட நலத்துறை

  மேலும், புதியவர்களாக அதிமுக அமைச்சரவையில் இருந்தவர்களான, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: