தமிழகத்தில் தொடர்ச்சியாக ரத்து செய்யப்படும் தேர்தல்! ஒரு பார்வை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தொகுதியில், பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

Web Desk | news18
Updated: April 16, 2019, 9:23 PM IST
தமிழகத்தில் தொடர்ச்சியாக ரத்து செய்யப்படும் தேர்தல்! ஒரு பார்வை
பணப்பட்டுவாடா
Web Desk | news18
Updated: April 16, 2019, 9:23 PM IST
தமிழகத்தில் சமீப காலமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ரத்து செய்யப்படுவது தொடர் கதையாக இருந்துவருகிறது. தேர்தல் ரத்து செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்த சிறிய தொகுப்பு.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலை தமிழகமும் சந்திக்கவுள்ளது.

election commission
தேர்தல் ஆணையம்இந்தநிலையில், தி.மு.க பிரமுகர் வீட்டில் 10 கோடி ரூபாய்க்கு அதிகமான பணம் கைப்பற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுவது அரிய ஒரு நிகழ்வாகத் தான் இருந்துவந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தால் பணப் புழக்கதைக் கட்டுப்படுத்த முடியாமல் குறிப்பிட்ட தொகுதியின் வாக்குப் பதிவை ரத்து செய்வது சாதாரண ஒரு நடவடிக்கையாக மாறிவருகிறது.

2016-ம் ஆண்டு தமிழகத்துக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், பணம் வழங்கப்பட்டது தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை. பின்னர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

Loading...

அந்த தொகுதியில், பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போது, பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர் வீட்டிலிருந்து பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அதன்அடிப்படையில்தான் இடைத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அந்த விவகாரத்திலும் இதுவரையில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

அதன்பிறகு, கருணாநிதியின் மறைவின் காரணமாக காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கஜா புயல் பாதிப்பின் காரணமாக நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அந்த கோரிக்கையை ஏற்று தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், வேலூர் மாவட்ட மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்ட மக்களவைத் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...