தமிழகத்தில் உதயமாகும் 29 புதிய நகராட்சிகளின் பட்டியல்...

தமிழக அரசு

தமிழ்நாட்டில் ஏற்கனவே 121 நகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது 29 நகராட்சிகள் புதிய அறிவிப்பின் மூலம் 150 நகராட்சிகள் ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது

  • Share this:
அதிராம்பட்டினம், திருச்செந்தூர், உளுந்தூரர்பேட்டை, மானாமதுரை என தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள் உதயமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் லேசான நில நடுக்கம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

இதே போல தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக இருக்கும் நகராட்சிகளின் பட்டியல்..

1. பள்ளப்பட்டி,
2. திட்டக்குடி,
3. மாங்காடு,
4. குன்றத்தூர்,
5. நந்திவரம்,
6. கூடுவாஞ்சேரி,
7. பொன்னேரி,
8. திருநின்றவூர்,
9.சோழிங்கர்
10. இடங்கனசாலை
11. தாரமங்கலம்
12. திருமுருகன் பூண்டி
13. கூடலூர்
14. காரமடை
15. கருமத்தம்பட்டி
16. மதுக்கரை
17. வடலூர்
18. கோட்டக்குப்பம்
19. திருக்கோவிலூர்
20. உளுந்தூர்பேட்டை
21. அதிராம்பட்டினம்
22. மானாமதுரை
23. சுரண்டை
24. களக்காடு
25. திருச்செந்தூர்
26. கொல்லன்கோடு
27. முசிறி
28. லால்குடி
29. புகளூர் மற்றும் tnpl புகளூர் பேரூராட்சிகள் இணைப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 121 நகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது 29 நகராட்சிகள் புதிய அறிவிப்பின் மூலம் 150 நகராட்சிகள் ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படுகிற ஊராட்சிகளில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் முடிவடைகின்ற போது இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும்
Published by:Arun
First published: