சென்னையில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை!

கோப்புப்படம்

ஊழியர்கள் துணையுடன் மதுபானம் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது

  • Share this:
    சென்னை கொடுங்கையூர் பகுதியில் சீல் வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, ஷட்டர்கள் வெல்டிங் அடித்து சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொடுங்கையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் சீல் உடைக்கப்பட்டு நள்ளிரவில் மதுபாட்டில் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஊழியர்கள் துணையுடன் மதுபானம் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published: