Home /News /tamil-nadu /

கூடுதல்‌ விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக்‌ ஊழியர்கள்‌ 14 பேர்‌ பணியிடை நீக்கம்!‌

கூடுதல்‌ விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக்‌ ஊழியர்கள்‌ 14 பேர்‌ பணியிடை நீக்கம்!‌

டாஸ்மாக்

டாஸ்மாக்

Tasmac | டாஸ்மாக்‌ கடைகளில்‌ கூடுதலாக பணம்‌ வசூலிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்‌ என்று மதுப்பிரியர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்‌.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் கூடுதல்‌ விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக்‌ ஊழியர்கள்‌ 14 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக்‌  நிர்வாகம்‌ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    தமிழகத்தில்‌ 'டாஸ்மாக்‌' மதுபானங்கள்‌ விலை ரூ.10 முதல்‌ ரூ.80 வரை உயர்த்தப்பட்டது. இதனால்‌ மனம்‌ குமுறிய மதுபிரியர்கள்‌, இனிமேல்‌'டாஸ்மாக்‌' கடைகளில்‌ கூடுதலாக பணம்‌ வசூலிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்‌ என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்‌.

    இந்த நிலையில்‌ 'டாஸ்மாக்‌' கடைகளில்‌ அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும்‌ கூடுதல்‌ விலைக்கு மதுபானங்கள்‌ விற்‌பனை செய்யப்படுகிறதா? என்பதை பறக்கும்‌ படை அமைத்து 'டாஸ்மாக்‌' நிர்வாகம்‌ கண்காணித்து வருகிறது.

    Also Read: ஆபாச வீடியோ.. பாலியல் வன்கொடுமை - சென்னையில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

    இந்த திடீர்‌ சோதனையில்‌, சென்னையில்‌ 14 ஊழியர்கள்‌ சிக்கி உள்ளனர்‌. இதுகுறித்து சென்னை மாவட்ட 'டாஸ்மாக்‌' மேலாளர்‌ ஜி.கற்பகவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பில்‌ கூறியிருப்பதாவது,

    “டாஸ்மாக்‌' நிர்வாகம்‌ சென்னை தெற்கு மாவட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளில்‌ மேலாண்மை இயக்குனர்‌
    அலுவலக பறக்கும்‌ படை அதிகாரிகள்‌ திடீர்‌ ஆய்வு மேற்கொண்டனர்‌.

    3 கடைகளில்‌ மதுபானங்களை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்த 14 ஊழியர்கள்‌ பணி
    யிடை நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.இவ்வாறு அவர்‌ கூறியுள்ளார்‌.

    “டாஸ்மாக்‌' நிர்வாகத்தின்‌ இந்த அதிரடி. நடவடிக்கைக்கு மதுபிரியர்கள்‌ மத்தியில்‌ மிகுந்த வரவேற்பு எழுந்துள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Tasmac

    அடுத்த செய்தி