ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு பிரசாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை’’ – ஆர்.டி.ஐ.யில் தகவல்

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு பிரசாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை’’ – ஆர்.டி.ஐ.யில் தகவல்

மதுபானங்களின் விலை ரூ.120 வரை அதிரடியாக உயர்த்திய தெலுங்கானா அரசு..

மதுபானங்களின் விலை ரூ.120 வரை அதிரடியாக உயர்த்திய தெலுங்கானா அரசு..

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று தெரிந்தும் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் சிறார்களும் மதுக்கடைகளை நாடிச்செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு பிரசாரத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாக செலவழிக்கப்படவில்லை என்ற விவரம், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மது ஒழிப்பு குறித்த பிரச்சாரத்திற்கு ஒதுக்கிய தொகை, செலவழித்த தொகை குறித்து ஆவடியை சேர்ந்த சமூக ஆர்வலர் தரணிதரன், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குரிய விவரங்களை, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பொதுத்தகவல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் வழங்கியுள்ளனர்.

அதில் 2011-12 ம் ஆண்டில் மது ஒழிப்பு பிரச்சாரத்திற்கு ஒரு கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 78 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில் 2012-13 ல் 84 லட்ச ரூபாயும், 2013-14-ல் 99 லட்ச ரூபாயும் செலவழிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்பின் ஆண்டிற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் 2015-16-ல் 1.42 கோடி ரூபாயும், 2016-17-ல் 2.49 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டிருப்பது தகவல் அறியம் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க - கோயில் மணி அடித்து அம்மனை வழிபடும் அதிசய ஆடு! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

2017-18-ல் 2.96 கோடி ரூபாயும், 2018-19-ல் 2.92 கோடி ரூபாயும், 2019-20-ல் 2.96 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளது.

2020-21-ல் 3.25 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெறும் 50 ஆயிரம் மட்டுமே செலவழிக்கப்பட்டு இருப்பது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க - பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை... கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

ஒட்டுமொத்தமாக பார்த்தால், பிரச்சாரத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில், ஒவ்வொரு ஆண்டும்  70 முதல் 80 சதவீதம்  மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5,382 டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி சராசரியாக 80 - 85 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் ஒரு விழுக்காடு நிதியையாவது ஒதுக்கி மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கிறார் தரணிதரன்.

2020-21 ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட மூன்றே கால் கோடி ரூபாயை கணக்கில் எடுத்துக் கொண்டோமானால் நாள் ஒன்றுக்கு 82 ஆயிரம் ரூபாய் மது ஒழிப்பு பரப்புரைக்கு கிடைக்கும். அதனை மாவட்ட வாரியாக ஒதுக்கினால் ஒரு மாவட்டத்திற்கு 2,200 ரூபாய் பிரிக்கப்படும். இந்த பணத்தில் ஒரு நாளைக்கு என்ன பிரச்சாரம் செய்ய முடியும் என்பதும் கேள்விக் குறியாக உள்ளது.

' isDesktop="true" id="722540" youtubeid="onskRDRkBcM" category="tamil-nadu">

மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்த நிலையில் மேலும் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று தெரிந்தும் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் சிறார்களும் மதுக்கடைகளை நாடிச்செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதே அனைவரின்கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் கன்னியப்பன், ஆவடி.

First published:

Tags: Tasmac