விழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன? குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாராய வியாபாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராயம் விற்ற பணம் நாலரை லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்

  • Share this:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உப்பளம் சாலையில் தனியார் நிலத்தில் கடந்த 24-ஆம் தேதி மாலையில், வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஓர் ஆண் சடலம் கிடந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது தலகாணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி 45 வயதான பாரதி என்ற பரத் என்பது தெரியவந்தது. கொலை வழக்குப் பதிவு செய்த மரக்காணம் போலீசார், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த வெள்ளை என்ற சுரேஷ் குமார் மற்றும் பூட்டு என்ற கணேஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

சாராய வியாபாரியாக இருந்து வந்த பரத் சமீப காலமாக அந்த தொழிலை விட்டுவிட்டு போலீசாருக்கு இன்ஃபார்மராக இருந்து வந்தார். தொழிலில் இருந்தபோது, சுரேஷ்குமார் மற்றும் கணேஷிடம் இருந்து சாராயத்தை வாங்கி, சிறு வியாபாரிகளிடம் விற்றுள்ளார். அவ்வாறு விற்ற நாலரை லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை சுரேஷ் மற்றும் கணேஷிடம் பரத் கொடுக்கவில்லை.

மேலும் படிக்க...மதுரை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கொலையின் பின்னணி என்ன?


பணத்தைப் பலமுறை கேட்டும் அவர் தராமல் இழுத்தடித்ததால் அவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 24-ஆம் தேதி உப்பளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த பரத்தை, சுரேஷ்குமார், தனது கூட்டாளிகளுடன் காரில் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

ஆளில்லாத இடத்தில் 5 பேர் சேர்ந்து அவரை வழிமறித்து அடித்துக் கொலை செய்துள்ளானர். சுரேஷ்குமார் மற்றும் கணேஷ் மீது ஏற்கனவே பல வழக்குகள் புதுச்சேரியில் உள்ளன. சுரேஷ் மீது சந்தேகப்பட்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் சுரேஷ் அளித்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகள் சதீஷ், வினோத்குமார், சந்தோஷ்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
 

கைதான 5 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து 4 அரிவாள்கள், 2 செல்போன்கள், ஒரு கார் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading