• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மொழிவாரி மாநிலங்கள் பிறந்த தினம்: ஆந்திரா, கேரளா, கர்நாடகா உற்சாக கொண்டாட்டம்!

மொழிவாரி மாநிலங்கள் பிறந்த தினம்: ஆந்திரா, கேரளா, கர்நாடகா உற்சாக கொண்டாட்டம்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த தினம்

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த தினம்

நவம்பர் 1, 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.  தெலுங்கு பேசும் மக்கள் (ஆந்திரா), மலையாளம் பேசும் மக்கள்(கேரளா), கன்னடம் பேசும் மக்கள் (கர்நாடகா) ஆகியோர் பிரிந்து சென்ற பின்னர் தமிழ் பேசும் மக்கள் சென்னை மாகாணத்திலே வசிக்க தொடங்கினர்.

  • Share this:
    இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்து இன்றுடன் 65 ஆண்டுகள் கடந்துள்ளது.  சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த தினத்தை ஆந்திரா, கேரளா,கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன.

    ஆங்கிலேயே அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பும் மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்டே இன்றைய ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் இருந்தன. திரைப்படத் துறை, அரசியல் என அனைத்திற்கும் தலைநகர் சென்னையை சார்ந்தே இயங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், தெலுங்கு பேசும் மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தையும் அதை தொடர்ந்து போராட்டத்தையும் கையில் எடுத்தனர்.

    இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதை தொடர்ந்து நவம்பர் 1, 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.  தெலுங்கு பேசும் மக்கள் (ஆந்திரா), மலையாளம் பேசும் மக்கள்(கேரளா), கன்னடம் பேசும் மக்கள் (கர்நாடகா) ஆகியோர் பிரிந்து சென்ற பின்னர் தமிழ் பேசும் மக்கள் சென்னை மாகாணத்திலே வசிக்க தொடங்கினர்.

    மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்து இன்றுடன் 65 ஆண்டுகள் கடந்துள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,ஆந்திர மாநிலம் உருவான தினத்தில் அம்மாநில சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். ஆந்திர மக்கள் தங்கள் திறமை, உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். அதனால்தான் அவர்கள் பல துறைகளில் வெற்றி பெறுகிறார்கள். ஆந்திர மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ஆட்டோ எல்பிஜி கியாஸ் விலையும் வரலாறு காணாத உயர்வு!


    இதேபோல் கேரளாவுக்கு, “"அதன் அழகிய சூழலுக்காகவும், அதன் மக்களின் உழைப்புத் தன்மைக்காகவும் பரவலாகப் போற்றப்படுகிறது. கேரள மக்கள் தங்களின் பல்வேறு முயற்சிகளில் வெற்றி பெறட்டும்” என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.  மேலும், ”கர்நாடக ராஜ்யோத்சவா சிறப்பு சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்கள். மக்களின் புதுமையான ஆர்வத்தால் கர்நாடகா தனி முத்திரை பதித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களில் மாநிலம் முன்னணியில் உள்ளது. வரும் காலங்களில் கர்நாடகா வெற்றியின் புதிய உயரங்களை எட்டட்டும்” என்று கர்நாடகாவும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: இறப்பதற்கு முன்பு இந்திரா காந்தி கூறிய வார்த்தை: ராகுல் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: