திமுக-வை போலவே 234 தொகுதியிலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் சர்வே எடுத்துள்ளோம்.. கார்த்திக் சிதம்பரம்..

கார்த்திக் சிதம்பரம்

திமுக எப்படி  ஐ பேக் முலம் சர்வே எடுத்து வைத்து இருக்கிறார்களா, அதேமாதிரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் 234 தொகுதியிலும் சர்வே எடுத்து வைத்து உள்ளோம் மானாமதுரையில் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதற்கு வருகை புரிந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சீட் ஒதுக்குவது பற்றி பேசும்போது எங்களுக்கு எங்கு தகுதியான வேட்பாளர் இருக்கிறார்கள் என்றுதான் பேசுவோம்.
எண்ணிக்கையை மனதில் வைத்து கொண்டு கூட்டணி பேச மாட்டோம். திமுக எப்படி  ஐ பேக் முலம் சர்வே எடுத்து வைத்து இருக்கிறார்களா, அதைப்போல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் 234 தொகுதியிலும் சர்வே எடுத்து வைத்து உள்ளோம். அந்த சர்வே எங்களிடம் உள்ளது.

எங்களுக்கு எங்கு பலம் இருக்கின்றது எங்களால் கூட்டணி கட்சிக்கு எங்கு பலம் இருக்கின்றது அதை வைத்து தான் சீட் கேட்போம்” என்று கூறினார்.

மேலும் படிக்க...அபராதம் செலுத்தினாலும், சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை.. பெங்களூரு சிறை கண்காணிப்பாளர்..



அதனைத் தொடர்ந்து பேசியவர், “ நம்பரை மனதில் வைத்து கொண்டு பேச்சு வார்த்தைக்கு போக முடியாது. திமுக கூட்டணி கட்சிகளை முறையாக அழைக்க வேண்டும்.
புதிதாக கூட்டணியில் கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.  எங்களால் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கின்றது.
எங்களிடம் தரமான வேட்பாளர்கள் இருக்கின்றார்கள்.  எல்லாவற்றையும் மையமாக வைத்து வாக்கு வாங்குவோம். அதனால் எண்ணிக்கையை மனதில்  வைத்து கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போவது கிடையாது.
ஜெயிப்பது மட்டுமே மையம்.  குறைந்த தொகுதி கேட்போமா அல்லது கூடுதல் தொகுதி கேட்போமா என்பதை இப்போது சொல்ல முடியாது” என எம்பி கார்த்திக் சிதம்பரம்  கூறினார்
Published by:Vaijayanthi S
First published: