தற்போது இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்

கோப்புப் படம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 • Share this:
  இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறவிப்பில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

  சென்னையை பொறுத்தவரையில், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி, அண்ணாசாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேநேரத்தில் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், அம்பத்தூர், ஆவடி பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
  Published by:Esakki Raja
  First published: